அடடா.. மிகப்பெரிய ஜாக்பாட்..தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சீதா.!
சீதாராமம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மிருணால் தாக்கூர் தமிழ் சினிமாவில் டாப் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு துல்கர் சல்மான், மிருனால் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதாராமம். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிருனால் தாக்கூரின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது என்றே கூறலாம்.
இந்த படத்தின் மூலம் மிருனால் தாக்கூருக்கு தமிழிலும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. எனவே சீதா ராமன் படத்தின் மூலம் மிருனால் தாக்கூருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இவர் தற்போது தமிழ் சினிமாவில் பெரிய டாப் நடிகரின் ஒருவர் படத்தில் நடிப்பதன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
அந்த படம் என்னவென்றால், சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் “சூர்யா 42” படத்தில் தான். இந்த படத்தில் ஏற்கனவே சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து, படத்தில் மிருனால் தாக்கூரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
மேலும், சீதா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த மிருனால் தாக்கூர் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.