திருப்பூரில் தமிழக தொழிலாளர்களை தாக்குவது போல வீடியோ.. வடமாநிலத்தவர்கள் கைது.!

Default Image

திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் – தமிழர்களுக்கிடையேயான தாக்குதல் தொடர்பாக இரண்டு வடமாநிலத்தவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 26 ஆம் தேதி திருப்பூரில் வட மாநிலத்தவர்களுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இதனை வட மாநிலத்தவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களை தாக்குவது போல கூறப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோவுக்கு சில சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த வைரல் வீடியோ குறித்து திருப்பூர் காவல் ஆணையர் ஏற்கனவே இது வெறும் வதந்தி தான். அங்கு ஏற்பட்டது தனிப்பட்ட மோதல் தான். அது தவறாக காண்பிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.

வடமாநிலத்தவர்கள் கைது : இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிகாரை சேர்ந்த ரஜித்குமார், பரேஷ்ராம் ஆகியோரே திருப்பூர் காவல் துறை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனி நபர்கள் மோதல் : இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்தவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது சாதாரணமாக திருப்பூரில் வேலை பார்க்கும் இரு நபர்கள், தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இடத்தில் இருக்கும் டீக்கடையில் இரு நபர்களுக்கு ஏற்பட்ட மோதல் தானே தவிர, வேறு எதுவும் உள்நோக்கம் கொண்டு தாக்குதல் நடைபெற இல்லை என காவல்துறை தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.

காவல்துறை எச்சரிக்கை : இது குறித்து மேலும் கூறுகையில், இந்த சம்பவம் இரு நபர்களுக்கு இடையான மோதல் தான். இதனை வேறு விதமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டாலும், வேறு விதமாக கருத்து பதிவு செய்தாலோ அதற்கும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்