ரூ.1 கோடி இழப்பீடு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டும்! மீனவர் கூட்டமைப்பு தீர்மானம்
மீனவர் கூட்டமைப்பு,தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. திருச்செந்தூர் ஜீவா நகரில் நெல்லை, தூத்துக்குடி மீனவர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
இதில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிடுதல், துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் இடத்தில் அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.