Gun Shot : ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ் மீது துப்பாக்கிச் சூடு
ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற பொழுது போலீஸ்காரரால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் நபா கிசோர் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள காந்தி சௌக்கில் தாஸ் ஒரு பொதுமக்கள் குறைதீர்ப்பு அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது மதியம் 12.30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான வழக்கறிஞர் ராம் மோகன் ராவ், கூறுகையில் ஒரு போலீஸ்காரர் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும்,அவருக்கு இடது மார்பில் புல்லட் காயம் ஏற்பட்டது, இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்றார்.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அவர் விமானம் மூலம் புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.
ओडिशा के मंत्री को करीब से मारी गई गोली
ASI गोपाल दास पर आरोप, हमलावर फरार #Odisha #OdishaHealthMinister #NabaKishoreDas #ATVideo @ashutoshjourno pic.twitter.com/TpRB4nfvDR— AajTak (@aajtak) January 29, 2023
ओडिशा के स्वास्थ्य मंत्री पर ASI ने कार से उतरते ही मारी गोली,गंभीर हालत में अस्पताल में भर्ती।स्वास्थ्य मंत्री नाबा दास जब अपनी गाड़ी से बाहर निकले तभी ASI ने उनके ऊपर फायरिंग कर दी।हमला करने वाले एएसआई गोपाल चंद्र दास को हिरासत में ले लिया गया है,पूछताछ जारी है।#Odisha pic.twitter.com/6GoEVMKL98
— Sohan singh (@sohansingh05) January 29, 2023