தனித்தனி கேப்டன்கள்! ரோஹித் சர்மாவுக்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை.!
உலகக்கோப்பையில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால், கேப்டன் பதவியை பிரிக்கலாம் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக எதையும் செய்யாவிட்டால், இந்திய அணி தனித்தனி கேப்டன்கள் வைத்துக்கொள்வதை அதிகாரப்பூர்வமாக்கிவிட முடியும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதன் மூலம் ரோஹித் சர்மாவுக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்தியா வெளியேறியதில் இருந்து, ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவும், டி-20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவும் என தனித்தனி கேப்டன்கள், இந்தியாவை வழிநடத்தி வருகின்றனர். ஆனால் இதனை இந்தியா அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும், 2022 டி-20 உலகக் கோப்பைக்கு பிறகு ரோஹித் ஷர்மா இன்னும் ஒரு டி-20போட்டியும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா எவ்வாறு செயல்படும் என்பதன் அடிப்படையில் தனித்தனி கேப்டன்கள் என்பது அதிகாரப்பூர்வமாக முடியும் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதைக்கு, இந்திய அணி அதிக டி20 போட்டிகளில் விளையாடாததால், அதைப் பற்றி எதுவும் கூறுவது சரியாக இருக்காது.
இந்தியா இதற்குப் பிறகு 2023 உலகக் கோப்பை வரை மூன்று டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது, ஐபிஎல்லுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸை(3 டி-20) எதிர்கொள்கிறது. அந்த போட்டி முடிந்ததும், நிலைமையை நாம் அறிந்து கொள்ளலாம் கார்த்திக் கூறினார். அதேசமயம் ரோஹித் ஷர்மாவின் தலைமையிலான இந்திய அணி, ஏதாவது சிறப்பாக சாதித்து விட்டால், ரோஹித்துக்கு நாம் 2024 டி-20 உலகக்கோப்பையில் ஒரு வாய்ப்பு வழங்கவேண்டும் என்று அவர் கூறினார்.
ஹர்டிக் பாண்டியா, தற்போது அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஒன்பது டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்து, 6 போட்டிகளில் இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். ஆல் ரவுண்டரான ஹர்டிக் பந்துவீச்சில் மிரட்டி, தனது கேப்டன்சி திறமையையும் அருமையாக வெளிப்படுத்தி வருகிறார் என்று கார்த்திக் மேலும் தெரிவித்தார்.