இந்தியாவை உடைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன- பிரதமர் மோடி
இந்தியாவை உடைக்கும் முயற்சிகள், நமது நாகரிகத்தை அழிக்க முடியவில்லை என ராஜஸ்தானில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் பகவான் ஸ்ரீ தேவநாராயண் ஜியின் 1111 வது அவதார மஹோத்சவின் விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது வரலாறு, நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தில் பெருமை கொள்கிறோம். உலகின் பல நாகரிகங்கள் காலப்போக்கில் முடிவுக்கு வந்தன. இந்தியாவை புவியியல், கலாச்சாரம், சமூகம் மற்றும் கருத்தியல் ரீதியாக உடைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எந்த சக்தியாலும் இந்தியாவை அழிக்க முடியாது.
இந்தியா ஒரு நிலப்பகுதி மட்டுமல்ல, நமது நாகரிகம், கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. அதனால்தான் இந்தியா தனது எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது. இதற்கு முழு காரணம் நமது சமூகத்தின் சக்தி, மற்றும் நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் என்று மோடி கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் குர்ஜார் சமூகத்தினரால் போற்றப்படும், தெய்வமான தேவநாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று நம்பப்படும் தேவநாராயணன் பிறந்த இடமான மலசேரி டுங்ரி கிராமத்தில்(பில்வாராவிலிருந்து 60 கிமீ) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, பில்வாராவில் உள்ள மலசேரி துங்ரி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.