பதவியை ராஜினாமா செய்தார் நேபாள துணை பிரதமர்..!

Default Image

குடியுரிமை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாள துணை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நேபாள குடியுரிமை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாள துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான ரபி லாமிச்சானே தனது பதவியை ராஜினாமா செய்தார். லாமிச்சானே 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து நேபாளத்திற்கு திரும்பினார். அப்பொழுது அவர் அமெரிக்க குடிமகனாக இருந்தார். 2018 ஆண்டு அவர் தனது அமெரிக்க குடி உரிமையை உதறி தள்ளினார்.

Rabi Lamichhane 1
[Image Source : Twitter/@hamrorabi]

நேபாளத்திற்கு வந்த பிறகு அவர் தனது நேபாள குடி உரிமையை பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை. ரபி லாமிச்சானேவின் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 20 இடங்களைக் கைப்பற்றியது. அவரது கட்சி, கூட்டணி அரசாங்கத்தில் இணைந்த பின்னர் நேபாள துணைப் பிரதமராக ரபி பதவியேற்றார்.

Rabi Lamichhane 2
Rabi Lamichhane [Image Source : Twitter/Rabi Lamichhane]

பின்னர் லாமிச்சானே செல்லாத குடியுரிமை ஆவணங்களுடன் தேர்தலில் நின்றார் என்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாள உச்ச நீதிமன்றம் அவரை பதவியில் இருந்து விலக்கியது. உச்ச நீதிமன்றம் அவரை பதவியிலிருந்து விலக்கியதையடுத்து லாமிச்சானே தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் புஷ்ப கமல் தஹாலிடம் சமர்ப்பித்தார்.

Nepal PM Pushpa Kamal Dahal
Pushpa Kamal Dahal [File Image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains