17 பாகிஸ்தான் கைதிகளை திருப்பி அனுப்பியது இந்தியா..!
அட்டாரி-வாகா எல்லை வழியாக 17 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா திருப்பி அனுப்பியது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான அட்டாரி-வாகா வழியாக 17 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா திருப்பி அனுப்பியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 17 கைதிகள் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பாகிஸ்தான் உயர் மட்ட குழு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தரப்பிலிருந்து தங்களுக்கு கிடைத்த ஒத்துழைப்பு மூலம் பல்வேறு தீவிர முயற்சிகளுக்குப் பிறகு அவர்களை தாய் நாட்டிற்கே திருப்பி அனுப்பியது.
இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பதினேழு பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இன்று திருப்பி அனுப்பப்பட்டனர் என்று என்று பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த கைதிகளை இந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பும் தங்களது முயற்சி தொடரும் என்று மேலும் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் காவலில் உள்ள பொதுமக்கள், கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியலை பரிமாறிக்கொண்டன. தற்போது இந்தியக் காவலில் உள்ள 339 பாகிஸ்தானிய கைதிகள் மற்றும் 95 பாகிஸ்தான் மீனவர்களின் பட்டியலை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தான் தனது காவலில் உள்ள 51 பொதுமக்கள், கைதிகள் மற்றும் 654 மீனவர்களின் பட்டியலை பகிர்ந்துள்ளது.