AK62 படத்தில் இருந்து விலகினாரா விக்னேஷ் சிவன்..? தீயாய் பரவும் புதிய தகவல்.!
அஜித் நடிக்கவுள்ள AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
AK62
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
AK62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்
AK62 படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், AK62 கதையில் நிறைய மாற்றம் தேவை என்பதால் படத்திலிருந்து விக்னேஷ்சிவன் தற்காலிகமாக விலகியுள்ளார் என்றும் தனது கனவு படமாக உள்ள அஜித்துடன் இணையும் படத்தை மெருகேற்ற விக்னேஷ் சிவன் நிறைய நேரம் கேட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
AK62 இயக்குனர் யார்..?
AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக ஒரு தகவல் பரவி வருவது போல மற்றோரு தகவல் என்னவென்றால், AK62 படத்தை இயக்குனர் விஸ்னு வரதன் இயக்கவுள்ளதாகவும், மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.
இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், AK62படத்தை மகிழ்திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை தகவலா அல்லது வதந்தி தகவலா என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.