இடைத்தேர்தல் பிரச்சாரம்.! திமுக அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை.!
இடைத்தேர்தல் குறித்து திமுக அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் களமிறங்க உள்ளார். மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா அவர்களின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்க உள்ளார்.
இதற்கான தேர்தல் பணிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதோ ஆரம்பித்து விறுவிறுப்பாக செயல்படுத்தி வருகின்றன. ஏற்கனவே அந்த தொகுதியில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தங்களது பிரச்சாரம் வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணி வேலைகளை குறித்து இன்று திமுக அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 3ஆம் தேதி ஈவிகேஎஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.