அனுமதி பெற்று தான் கட்டடம் இடிக்கப்பட்டது.! அண்ணாசாலை விபத்து குறித்து மேயர் பேட்டி.!

Default Image

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடமானது அனுமதி பெற்று தான் இடிக்கும் பணி நடைபெற்று உள்ளது. – சென்னை மேயர் பிரியா விளக்கம். 

சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சுரங்கப்பாதை அருகில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத பழைய கட்டிடமானது இடிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மதுரையினை சேர்ந்த பிரியா என்ற பெண் மீது கட்டிட சுற்றுச்சுவர் விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய பிரியாவை தீயணைப்புத்துறையினர் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கட்டடத்தின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீண்டும் கட்டடத்தை இடிக்கும் பணியை தொடங்கக்கூடாது எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உரிய பாதுகாப்பு இன்றி கட்டடம் இடிக்கப்பட்டதாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சென்னை மநகராட்சி மேயர் பிரியா ராஜன் செய்தியாளிடம் கூறுகையில், சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடமானது இடிக்கப்பட்டது அனுமதி பெற்று தான் இடிக்கும் பணி நடைபெற்று உள்ளது. ஆனால், அங்கு பேரிகேட் உள்ளிட்ட முறையான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்படாமல் இருந்துள்ளது என விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் இது போன்ற தவறு நடக்காமல் இருக்கும் எனவும் மேயர் பிரியா உறுதி அளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்