டிஎன்பிஎஸ்சி குரூப் 3ஏ தேர்வு.! 15 காலிபணியிடங்களுக்காக தேர்வெழுதும் 98,807 பேர்.!
டிஎன்பிஎஸ்சி குரூப் 3ஏ தேர்வுவை இன்று 15 மாவட்டங்களில் 98,807 பேர் தேர்வெழுதுகின்றனர்.
தமிழ்நாடு தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியின் மூலம் தமிழகத்தில் 14 கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணியிடங்கள் மற்றும் ஒரு தொழில் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடம் உட்பட 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
அதன் காலிப்பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெற்று வருகிற்து. 15 மாவட்டங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இதில், வெறும் 15 காலிப்பணியிடங்களுக்கு 331 மையங்களில் 98,807 பேர் தேர்வெழுதுகின்றனர்.