நேர்காணலின் இடையில் கூகுள் எச்.ஆர் பணிநீக்கம்..!
வேலைக்காக விண்ணப்பித்தவர்களை கூகுள் எச்ஆர் நேர்காணல் செய்யும் பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கூகுளின் டப்ளின் அலுவலகத்தில் (Dublin office) எச்ஆர் ஆக பணிபுரியும் டான் லானிகன் ரியான்(Dan Lanigan Ryan), வேலைக்காக விண்ணப்பித்தவர்களில் ஒருவருடன் தொலைபேசியில் நேர்காணலில் இருந்துள்ளார். திடீரென அவரது நேர்காணல் அழைப்பு பாதியில் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைப்பை தொடர நினைத்த போது அவரால் நிறுவன இணையதளத்தில் நுழைய முடியவில்லை.
ரியான் தனது சிஸ்டத்தில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அவரது குழுவின் மற்ற உறுப்பினர்களும் தங்கள் சிஸ்டம்களில் இருந்த தங்களது கணக்குகளில் வெளியேறியதாக கூறினார்கள். பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தெரிவிக்கும் மின்னஞ்சலைப் பெறும் வரை ரியான் இது ஒரு தொழில்நுட்பச் சிக்கல் என்று நிராகரித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நிறுவனத்தின் இணையதளத்திற்கான அணுகலை இழந்த சிறிது நேரத்திலேயே அவரது மின்னஞ்சல் மற்றும் அவரது நேர்காணல் அழைப்பு ஆகிய இரண்டும் துண்டிக்கப்பட்டதாகவும், பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு கூகுள் 12,000 பணிநீக்கங்களை அறிவிப்பதாகச் செய்தியில் பார்த்தேன்” என்று ரியான் கூறியுள்ளார்.