அஜித்….சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்.!

Default Image

பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் காலமானார். 

ஸ்ரீனிவாச மூர்த்தி : 

டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி சூர்யா , அஜித், மோகன் லால், ராஜசேகர், விக்ரம் என பல டாப் நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங்  பேசியுள்ளார்.  பல ஆண்டுகளாக சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாச மூர்த்தி இன்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

srinivasa murthy Dubbing artist
srinivasa murthy Dubbing artist [Image Source : Twitter]

இவரது திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு சினிமா பிரபலங்களும், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யா இரங்கல்

ஸ்ரீனிவாச மூர்த்தி மறைவுக்கு நடிகர் சூர்யாவும் தனது இரங்கலை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பதாவது ” இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு .. ஸ்ரீனிவாசமூர்த்தி உங்களுடைய  குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன் அன்பே ஐயா! சீக்கிரம் சென்றுவிட்டார்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஸ்ரீனிவாச மூர்த்தி சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் தெலுங்கு மொழிக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்