பழம்பெரும் நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார்..!
பழம்பெரும் நடிகை ஜமுனா உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜமுனா. 82 வயதான நடிகை இவர் கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார்.
இவருடைய திடீர் மறைவு ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
*సీనియర్ నటి జమున గారు కన్నుమూత*
Om Shanti ???????? #RIPJamuna pic.twitter.com/jZkP7ClGk4
— Suresh Kondeti (@santoshamsuresh) January 27, 2023
நடிகை ஜமுனா தெலுங்கில் கடந்த 1953-ஆம் ஆண்டு வெளியான ‘புட்டிலு’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் ககதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெலுங்கி சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த ராமராவ், அக்கினேனி ஆகியோருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.
தமிழில் குழந்தையும் தெய்வமும், மனிதன் மாறவில்லை, மிஸ்ஸியம்மா, தூங்காதே தம்பி தூங்காதே, தங்கமலை ரகசியம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே 1950,1960 களில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.