அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை…ஓப்பனாக பேசிய ரம்யா பாண்டியன்.!

Default Image

நடிகை ரம்யா பாண்டியன் தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. இந்த திரைப்படம் மலையாளத்தில் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய விட்டது. தமிழில்  நேற்று தான் வெளியானது. படத்தைப் பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

NanpakalNerathuMayakkam
NanpakalNerathuMayakkam [Image Source : Twitter]

இதற்கிடையில் படத்தின் பிரமோஷன்காக ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த  ரம்யா பாண்டியனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார்.  அப்போது தொகுப்பாளர் அவரிடம் உங்களுக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என்று கேட்டுள்ளார்.

RamyaPandian
RamyaPandian [Image Source : Twitter]

இந்த கேள்விக்கு பதில் அளித்த ரம்யா பாண்டியன் ” எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் எனக்கு நடிக்க சம்மதம் தான். ஆனால், ஆசை என்றால் “பொன்னின் செல்வன்” படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தை போல ஏதேனும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

Ramya Pandian
Ramya Pandian [Image Source : Twitter]

வரலாற்று படங்களை பார்க்கையில் எனக்கும் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நாம் நடிக்கலாமே என்று தோணும். எனவே இதே போல ஒரு படத்தில் நடிக்கணும் அதுதான் என்னுடைய ஆசை என்று மனம் திறந்து பேசி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்