AI பயன்படுத்தி இந்தியில் பேசும் இஸ்ரேலிய தூதர்! வெளியிட்ட வீடியோ .!

Default Image

AI-மொழி கருவியைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய தூதர் சரளமாக இந்தியில் பேசும்  வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) எனும் சாட் GPT உலகெங்கும் தற்போது பிரபலமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்தின் டிஜிட்டல் டிப்ளமசி அமைப்பின் தலைவரான தூதர் டேவிட் சாரங்கா, இந்த AI-மொழி கருவியின் உதவியால் சரளமாக இந்தியில் பேசி வருகிறார். இந்த வீடீயோ, இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

தகவல் தொடர்புகளை இந்த செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வளவு எளிதாக்கிவிட்டது என்பதை இந்த வீடியோ மூலம் சாரங்கா விளக்கினார். இதற்கு ஒரு ட்விட்டர் பயனர், இது மிகவும் அற்புதமாக இருப்பதாக பதிலளித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின்(AI) ஆற்றலால், மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் அடைந்துள்ள முன்னேற்றத்தால், இஸ்ரேலிய தூதர் பல சர்வதேச மொழிகளில் பேச முடிந்ததாக கூறினார்.

AI, தொலைத்தொடர்புகள் மற்றும் மெட்டாவர்ஸ்(Metaverse) போன்றவற்றை நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டுவந்ததில், தாங்கள் ஒரு கருவியாக இருந்துள்ளோம் என்று இஸ்ரேலிய நிறுவனம் கூறியது. இப்போது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் அவர்களின் சொந்த மொழிகளில், நாங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று மேலும் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்