நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் விலகல்.!
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் கை மணிக்கட்டில் காயம் அடைந்துள்ளதால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் ஏற்கனவே, ஒருமுறை மணிக்கட்டில் காயம் அடைந்து கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான டி-20 தொடரையும் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணிக்காக விளையாடிவரும் தொடக்கவீரரான ருதுராஜ் கெய்க்வாட், காயம் குறித்து பிசிசிஐ நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதனையடுத்து அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்திய அணியில் ருதுராஜ்-க்கு பதிலாக இன்னும் மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை.