டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மீட்டெடுக்கும் மெட்டா..!
டொனால்ட் டிரம்பின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை திரும்ப தருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கேபிடல் ஹில்லில் ஜனவரி 6, 2021 அன்று 2,000-கும் மேற்பட்டவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை பாராட்டி பதிவுகளை வெளியிட்டார். இதனால் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது.
அவரது கணக்குகள் சஸ்பெண்ட் ஆவதற்கு முன்பு வரை அவரை பேஸ்புக்கில் 34 மில்லியன் (34 லட்சம்) பயனர்களும், இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் (23 லட்சம்) பயனர்களும் பின்தொடர்ந்தனர். டிரம்பின் கணக்குகள் இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை திரும்ப தருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிக் கிளெக் கூறியது :
இந்த இடைநீக்கம் அசாதாரண சூழ்நிலையில் எடுக்கப்பட்ட ஒரு அசாதாரண முடிவு என்று மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் துணை தலைவர் நிக் கிளெக் கூறினார். மீண்டும் குற்றங்களைத் தடுக்க மெட்டா புதிய பாதுகாப்புப் பாதைகளை அமைத்துள்ளது. பேஸ்புக் (Facebook) உலகின் மிகப்பெரிய சமூக ஊடக தளம் மட்டுமல்ல டிரம்பின் அரசியல் பிரச்சாரங்களுக்கு நிதி திரட்டும் முக்கிய மூலதனமாக உள்ளது என்று கிளெக் மேலும் கூறினார்.
டிரம்பின் பதில் :
உங்களுக்கு பிடித்த ஜனாதிபதியான என்னை சமூக வலைத்தளங்களில் இருந்து என்னை தடை செய்ததில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை இழந்த பேஸ்புக் எனது கணக்கை மீண்டும் தருவதாக அறிவித்தது. எனக்கு நடந்தது போல வேறு எவருக்கோ இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது என்று தெரிவித்தார்.