யூனியன் பட்ஜெட் மற்றும் அதன் முக்கிய வரலாறு.!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யூனியன் பட்ஜெட் தாக்கலை வரும் பிப்-1 ஆம் தேதி அறிவிக்க உள்ளார். இதற்கு முன்வந்த பட்ஜெட் குறித்து அவற்றின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்…

Budget ns

பட்ஜெட்:                                                                                                                                  அரசங்கத்தின் பட்ஜெட் என்பது அடுத்த ஒரு வருடத்திற்கான நாட்டின் செலவீனங்களுக்கான நிதி நிலைமையைக் குறிக்கிறது. இந்த பட்ஜெட் நிதி அமைச்சகத்தால், நிதி ஆயோக் மற்றும் மற்ற முக்கிய அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து உருவாக்கப்படுகிறது. பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் இந்த பட்ஜெட் இடம்பெறுகிறது.

யூனியன் பட்ஜெட் உருவாக்கும் பணி, ஆகஸ்ட்- செப்டம்பர் மாதம் தொடங்கி 6 மாதங்கள் கழித்து பிப்ரவரி மாதம் இந்த பட்ஜெட் தாக்கலானது நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது. இந்த பட்ஜெட் ஆனது நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1இல் நடைமுறைக்கு வருவதற்கு முன், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகிறது.

1st budget 1947

இந்தியாவின் முதல் பட்ஜெட்:                                                                                                            இந்தியாவின் முதல் பட்ஜெட் ஆனது, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கிழக்கிந்திய நிறுவனத்தைசேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் தயாரித்து வெளியிட்டார். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட், நவ-26, 1947 ஆம் ஆண்டு நிதியமைச்சர் சண்முகம் செட்டி வெளியிட்டிருந்தார்.

ns long peech

நீளமான பட்ஜெட் உரை:                                                                                                                        பிப்-1, 2020 இல் நிர்மலா சீதாராமன் நிதியாண்டு 2020-21 பட்ஜெட் அறிக்கையை வாசிக்கும்போது, 2 மணிநேரம் 42 நிமிடங்கள் வரை வாசித்தது தான் இதுவரை மிகநீளமான பட்ஜெட் உரையாக கருதப்படுகிறது. அவர் ஏற்கனவே தனது முதல் பட்ஜெட் அறிக்கையை 2019இல் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் உரையாற்றியிருந்தார்.

சுருக்கமான உரை:                                                                                                                                    சுருக்கமான உரையாக 1977இல் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் 800 வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தி தனது பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

moraji desai hn

அதிக பட்ஜெட்கள்:                                                                                                                                    இந்திய வரலாற்றில் இதுவரை 10 பட்ஜெட் அறிக்கைகளை, முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் வெளியிட்டுள்ளார். அவர் 1962-69 காலகட்டத்தில் நிதியமைச்சராக இருந்த போது இந்த அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். மொராஜி தேசாயை தொடர்ந்து ப.சிதம்பரம் 9 பட்ஜெட் அறிக்கைகளும், பிரணாப் முகர்ஜீ மற்றும் யஸ்வந்த் சின்ஹா 8 பட்ஜெட் அறிக்கைகளும், மன்மோகன் சிங் 6 அறிக்கைகளும் வெளியிட்டுள்ளனர்.

பட்ஜெட் நேரம்:                                                                                                                                            1999 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் படி பிப்ரவரி மாத இறுதிநாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டு வந்தநிலையில், 1999க்கு பின்னர் யஸ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு மாற்றியமைத்தார், 2017இல் அருண் ஜெட்லீ, பிப்ரவரி மாத முதல் தேதியில், இந்த பட்ஜெட் அறிக்கைக்கான தேதியை மாற்றினார்.

மொழி:                                                                                                                                                              பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்ததன் அடிப்படையில் 1955 வரை, ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த பட்ஜெட் அறிக்கை, அதன்பிறகு காங்கிரஸ் அரசு பட்ஜெட் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட்டது.

indirabudget

முதல் பெண்:                                                                                                                                                1970-71 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி, பட்ஜெட் அறிக்கையை வெளியிட்ட முதல் பெண் ஆவார், அவரைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட் அறிக்கையை வெளியிடும் இரண்டாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்பு பட்ஜெட்:                                                                                                                                          1973-74ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தலைமையிலான அரசில், யஸ்வந்த்ராவ் சவான் வெளியிட்ட பட்ஜெட் அறிக்கை, கறுப்பு பட்ஜெட் என்று கூறப்படுகிறது. அந்த வருடத்தில் இந்தியாவின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால், இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 550 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

nirmala 100budget

நூற்றாண்டு பட்ஜெட்:                                                                                                                              2021 ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட் அறிக்கை ஒரு நூற்றாண்டு பட்ஜெட் என அறிவித்திருந்தார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பட்ஜெட்டைப் புதுப்பிக்கும் வகையில், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதாரம், தனியார்மயமாக்குதலில் இருந்து அதிக வரிகளை நம்பியிருந்தது. இதனால் இதனை ” ஒரு நூற்றாண்டு பட்ஜெட் ” என கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO