அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புடன் மெரினாவில் கலைகட்டும் குடியரசு தின விழா..!
சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
74 வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேரு பிரிவுகளை விலகும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் பாரம்பரிய கலாச்சாரத்தை சிறப்பிக்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, முதல் ஊர்தியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மாணவர்களின் மங்கள இசையில் நடைபெற்ற பாரத நாட்டியதுடன் தொடங்கியது. இதனையடுத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்தி வள்ளுவர் சிலையுடன் இடம்பெற்றது.
மேலும் காவல்துறையின் அலங்கார ஊர்திகள், முதல்வரால் அறிமுகபடுத்தப்பட்ட சிற்பி திட்டத்தை காட்டும் ஊர்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஊர்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டத்தின் ஊர்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திட்டம் தொடர்பான ஊர்திகள் உட்பட பல்வேறு ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற்றது.