குடியரசு தின விழா! இதுவரை சிறப்பு விருந்தினர்கள் யார் யார்?

Default Image

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி வந்துள்ள நிலையில் இதற்கு முன்பு வந்தவர்கள் பற்றி பார்க்கலாம்…

இந்தியா தனது சுதந்திரத்தை 1947இல் போராடி பெற்றுவிட்டபிறகு, 3 வருடங்கள் கழித்து 1950 ஆம் ஆண்டு ஜன-26இல் தனது முழு அரசமைத்தது. இந்த நாளையே நாம் அனைத்து வருடமும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று 74 ஆவது குடியரசு தினத்தை, இந்தியா கோலாகலமாக கொண்டாடவுள்ள நிலையில் பல்வேறு அணிவகுப்பு வரிசைகள், கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்களும் நடைபெறுகிறது.

இந்த வருடம் இந்தியாவின் குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று முன்தினம், தனிவிமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இந்திய பாரம்பரிய முறைப்படி அவருக்கு வரவேற்பு அளித்தனர். வட ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இருந்து வரும் முதல் சிறப்பு விருந்தினர், அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அப்தெல் பத்தா, இந்தியா-எகிப்து உறவை வலுப்படுத்த பாதுகாப்பு மற்றும்  மற்ற முக்கிய கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் எகிப்திய இராணுவக் குழுவும் பங்கேற்கிறது. குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபரை அழைத்திருப்பது இந்தியாவிற்கும், எகிப்திற்கு இடையேயான நட்புறவின் அடையாளமாகும்.

uk queen rpd

இதற்கு முன்னதாக 1950 இல் நடந்த அணிவகுப்பின் முதல் தலைமை விருந்தினராக இந்தோனேசியாவின் ஜனாதிபதி சுகர்னோ பங்குபெற்றிருந்தார். 1961ஆம் ஆண்டின் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டார், 1995இல் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவும், 2007இல் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கின்றனர்.

barackobama 2015

2014இல் ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே வும், 2015இல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்த குடியரசு தினவிழா விருந்தினராக கலந்து கொண்டிருந்தனர். கடைசியாக 2020 ஆம் ஆண்டு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அதன்பிறகு கொரோனா பரவலைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த ஆண்டு எகிப்து அதிபர் கலந்து கொள்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்