கோயில் நிதி விவகாரம்- உயர்நீதிமன்றம் உத்தரவு.!
கோயில் நிதியைக்கொண்டு அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை மேற்கொள்ளமுடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கோயில் நிதிகளைக் கொண்டு அறநிலையத்துறைக்கு வேண்டிய செலவுகளை மேற்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மனுதாரர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆட்சியில் கோயில் நிதியிலிருந்து அறநிலையத்துறை அலுவலகங்களுக்கு தேவையான செலவுகளை செய்தது மற்றும் அதன் அமைச்சருக்கு வாகனம் வாங்கியது என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிதி தேவையில்லாமல் செலவழித்து தொடர்பாக கேள்வி எழுப்பினார், மேலும் அறநிலையத்துறை செலவுகளை தொகுப்பு நிதி மூலம் எடுத்துக்கொள்ளவேண்டும், கோயில் நிதியிலிருந்து எடுக்க கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்தமாதம் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.