ஆட்டோகிராப்புடன் நம்பர் கொடுத்துட்டாரு…ரகசியம் பகிரும் ஹாரிஸ் ஜெயராஜ் மனைவி.!
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாஜெயராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்தும் காதல் குறித்தும் பேசியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் – சுமாஜெயராஜ் :
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ஏனென்றால், அவருடைய இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. 90ஸ் காலகட்டத்தில் இவர் இசைமைத்த பாடல்கள் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு கூட பிடித்த ஒன்றாக இருக்கிறது.
அந்த அளவிற்கு அருமையான பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 1999-ஆம் ஆண்டு சுமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
சுமாஜெயராஜ் பேட்டி
இசையமைப்பாளர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாஜெயராஜ் சமீபத்தில் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்தும் காதல் பற்றியும் பேசியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி மனைவி சுமாஜெயராஜ்
தன்னுடைய கணவர் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி பேசிய மனைவி சுமாஜெயராஜ் ” என்னுடைய கணவர் பற்றி பலரும் நினைப்பது என்னவென்றால், அவர் ரொம்ப அமைதியானவர் என்று. ஆனால், அது உண்மையில்லை. அவரிடம் 10 நிமிடம் நீங்கள் பேசினால் 9 நிமிடம் சிரித்துக்கொண்டே தான் இருப்பீர்கள்.
ஏனென்றால், என்னுடைய கணவர் அவ்வளவு நகைச்சுவையாக சந்தோசமாக எல்லாரிடமும் பேசுவார். நான் அவருக்கு செல்ல பெயர் ஒன்று வைத்துள்ளேன். அதனை சொன்னால் அவர் ரொம்பவே கடுப்பாகி விடுவார். அதனால் நான் சொல்லமாட்டேன்.
எப்படி இருந்து பேருக்கும் காதல்..?
முதன் முதலாக நான் ஹாரிஸ் ஜெயராஜை சந்தித்த போதே எனக்கு பிடித்துவிட்டது. நாங்கள் இருவரும் பிரியும் போது அவரிடம் சென்று நான் நீங்கள் எப்போவது பெரிய இசையமைப்பாளரான பிறகு என்னை மறந்துவிடுவீர்கள். எனவே உங்களுடைய முதல் ஆட்டோகிராப் எனக்கு போட்டுக்கொடுத்ததாக இருக்கவேண்டும் என்று கூறினேன்.
கூறிவிட்டு அவரிடம் ஒரு புத்தகத்தையும், பென்ணையும் கொடுத்தேன். அவர் ஆட்டோகிராப்புடன் அவருடைய நபரையும், எழுதி தந்துவிட்டார். அப்படியே எங்களுக்குள் காதல் மலர்ந்தது. திருமணத்திற்கு வீட்டில் சம்மதிக்க ஹாரிஸ் அரை தினம் மட்டுமே சாப்பிடாமல் இருந்தார். அவருடைய அம்மா திருமணதிற்கு ஒப்புக்கொண்டார்.
ஒரு பெண்ணிற்கு காதல் முக்கியம் – சுமாஜெயராஜ்
ஒரு பெண்ணிற்கு காதல் என்பது ரொம்பவே முக்கியம். ஒருவர் காதலிக்கும் சமயத்தில் ஒரு வலுவான சக்தி நம்மகூட இருப்பது போலவே தெரியும். ஏனென்றால், ஒரு நபர் உங்களை நேசிக்கிறார்கள் என்றாலே பெரிய வைட்டமின் பூஸ்டர் என்று சுமாஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
காதல் தோல்வியில் முடிந்தால் யாரும் கவலை பட வேண்டாம். ஏனென்றால், நம்மளை விட அவர்கள் மீது யாரும் இவ்வளவு பாசம் வைக்க முடியாது. எனவே அவர் நம்மளை விட்டு போனால் அவருக்கு தான் அது (Loss) நஷ்டம்.