பெட்ரோல், டீசல் விலை ஜூன் 1-ம் தேதி முதல் ரூ.1 குறைகிறது!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

Default Image

கேரளாவில் பெட்ரோல் டீசல் விலையில் 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலை குறைப்பு ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது” என்று  கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Image result for பினராயி விஜயன்

பெட்ரோல், டீசல் இன்றைய விலை:

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, கடந்த 16 நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று காலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு வந்தது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசலின் விலை 3 ரூபாய் 60 காசுகள் வரை அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் குறைந்து. 72 ரூபாய் 58 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 5 டாலர் வரை வீழ்ச்சியடைந்ததே, இந்த விலை குறைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்