பேரறிஞர் அண்ணா வேறு.. சீமான் வேறு.! என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள்.! சீமான் பேட்டி.!
பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு. அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் வெல்வேன். – நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே போல அதிமுக சார்பாக அதிமுகவே நேரடியாக களமிறங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அது இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு தரப்பாக இருப்பதால் அதிலும் குழப்பம் நிலவுகிறது. பாஜக, கூட்டணி தலைமையான அதிமுக தான் போட்டியிடும் என அறிவித்து விட்டனர்.
இடைத்தேர்தலில் தனித்து போட்டி, : இந்த இடைத்தேர்தலில் தங்கள் நிலைப்பாடு குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நான் சொல்கிறேன் இடைத்தேர்தலில் தனித்து போட்டி, ஒரு பெண் வேட்பாளரை தேர்வு செய்து களமிறக்குவேன். அது போல பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் கூற முடியாது. பாஜகவுக்கு தமிழகத்தில் பலனில்லை.
பாஜக வேலையாள் அண்ணாமலை : அண்ணாமலையின் முதலாளி இங்கு இல்லை. அவர்கள் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான். அவர்கள் கூறும் வேலைய செய்யுற வேலையாள் அண்ணாமலை அவ்வளவு தான். நாங்கள் என்றும் சோர்ந்து போக மாட்டோம். எங்களுக்கு இருப்பது சுதந்திர பசி. எங்களை சோற்று பசி ஒன்றும் செய்யாது என தெரிவித்தார்.
அண்ணா வேறு. சீமான் வேறு : நாங்கள் இப்போதும் தனியாக தான் நிற்போம். பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு. அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் வெல்வேன். என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள். எனவும் குறிப்பிட்டுள்ளார். அதிமுக மேல இடத்திற்கு அதிகம் கட்டுப்பட்டு நடக்கிறது. இடைத்தேர்தலில் நான் உறுதியாக நான் வெல்வேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் என் ஆட்டத்தை பாருங்கள். என செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்.