நியூசிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் கிறிஸ் ஹிப்கின்ஸ்..!
நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.
ஐந்தரை ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடித்த நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜெசிந்தாவின் ராஜினாமாவையடுத்து அடுத்த பிரதமர் வேட்பாளராக கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவிக்கபட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நியூசிலாந்து பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்.
ஹிப்கின்ஸ் பிரதமராக மட்டும் அல்லாமல் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைச்சராகவும் இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பின் போது ஹிப்கின்ஸ் கூறியதாவது, ” இந்த பதவி எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம் என்றும் எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பொறுப்பு” என்றும் கூறினார்.
இந்த பதவியில் தனக்கு வரும் சவால்களை எதிர்கொள்வதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார். மேலும் கிறிஸ் ஹிப்கின்ஸ் நியூசிலாந்தின் 41வது பிரதமராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.