சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபரை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி.!
எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசிக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வரவேற்ற்றனர்.
நமது நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசு இதற்கான முன்னேற்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அதேபோல, மத்திய அரசு, டெல்லியில் குடியரசு தின விழா ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது . இதற்கான பாதுகாப்பு பணிகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி : வழக்கமாக குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டு அரசியல் தலைவர்களை விருந்தினராக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி அவர்களை இந்தியா சிறப்பு விருந்தினராக மத்திய அரசு அழைத்து இருந்தது.
பிரதமர் மோடி வரவேற்பு : அதன்படி நேற்று அவர் தனி விமானம் மூலம் நேற்று எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி இந்தியா வந்தடைந்தார் அவரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரஞ்சன் ராஜ்குமார் சிங் வரவேற்றார். இதனை தொடர்ந்து தற்போது அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இந்திய பாரம்பரிய முறைப்படி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து நாளை டெல்லி, சென்டிரல் விஸ்டா அவென்யூவில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். வட ஆப்பிரிக்க நாடான எகிப்தியில் இருந்து வரும் முதல் சிறப்பு விருந்தினர் அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் : டெல்லி முழுவதும் டிரோன்கள், பாராகிளைடர் மூலம் பறப்பது, ஆளில்லா குட்டி விமானங்களை பறக்க விடுவது, ஏர் பலூன்கள், பாரா மோட்டார்கள் உள்ளிட்டவற்றை பறக்க அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடையானது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் , கண்காணிப்புப் பணிகளும் ரோந்து பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்திய எல்லை பகுதிகளிலும் ‘ஆபரேஷன் அலெர்ட்’ என்ற பெயரில் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.