காதலனை அறிமுகப்படுத்தும் பிக்பாஸ் ஆயிஷா.!? வைரலாகும் புகைப்படம்.!
நடிகை ஆயிஷா சத்யா சீரியல்களில் நடித்து கொண்டிருந்த காலத்திலே அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. அதனை தொடர்ந்து அவர் பிக் பாஸ் 6 -வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகிவிட்டார்.
இவர் பிக் பாஸ் வீட்டிற்கு இருந்தபோது தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சக போட்டியாளர்களிடம் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது விரைவில் ஆயிஷா தனது காதலரை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- தரமான கேங்ஸ்டார் படம் லோடிங்…பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்.! ‘AK63’ அப்டேட் இதோ.!
அதன்படி, நடிகை ஆயிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் தனது காதலனின் முகத்தை மறைத்து கொண்ட எடுத்த புகைப்படத்தை வெளியீட்டு தன் காதலனை விரைவில் அறிமுகப்படுத்தப்போவது போல குறிப்பிட்டுள்ளார்.
காதலனை அறிமுகம் செய்யப்போவதாக நடிகை ஆயிஷா கூறியுள்ளார். #Ayesha | #BiggBossTami6 pic.twitter.com/BJ5zsXBISI
— CineBloopers (@CineBloopers) January 25, 2023
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காத்திருக்கிறோம் என்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆயிஷா பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டு வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்த பலரும் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என்பதை போல கேள்வியை எழுப்பி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.