ஜனாதிபதியின் காவல் பதக்கங்கள் அறிவிப்பு…
21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறந்த பணிக்கான பதக்கங்கள் மாநில போலீஸ் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி 21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் தமிழகத்தை சேர்ந்த தேன்மொழி, பொன் ராமு, ரவி சேகரன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.