சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி எறிந்த நபர்..! போலீசார் விசாரணை..!
பெங்களூரு கேஆர் மார்க்கெட்டில் உள்ள மேம்பாலத்தில் இருந்து, ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த நபரிடம் போலீசார் விசாரணை.
பெங்களூரு கேஆர் மார்க்கெட்டில் உள்ள மேம்பாலத்தில் இருந்து, 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மேம்பாலத்தின் மீது ஏறி நின்று தன்னிடம் இருந்த 10 ரூபாய் நோட்டுகளை கீழே எரிந்துள்ளார்.
அப்போது அங்கு மக்கள் கூட்டமாக இருந்த நிலையில் அப்பகுதியில் நின்ற மக்கள் ரூபாய் நோட்டுகளை கையில் பிடிக்கவும், அள்ளி எடுக்க முயற்சி செய்தனர். மேலும் அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு ரூபாய் நோட்டுகளை எடுக்க முயற்சித்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் போலீசார் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில் அந்த நபர் தன்னை ஒரு மேலாளராக நிலை நிறுத்துவதற்காகவும், பதவி உயர்வு மற்றும் விளம்பரத்திற்காக இதை செய்ததாக போலீசார் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.