கமல்ஹாசனுடன் சூழ்நிலை காரணமாக கூட்டணி வைத்தோம்.! சரத்குமார் பேச்சு.!
சூழ்நிலை காரணமாக மக்கள் நீதி மய்ய கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என சமக தலைவர் சரத்குமார் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது நிலைப்பாடு என்ன என்பதை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூட்டணி வைத்திருத்தந்து குறித்தும் பேசினார்.
சரத்குமார் பேசுகையில், கடந்த முறை சட்டப்பேரவை தேர்தல் இந்த தொகுதியில் எங்கள் கூட்டணியில் இருந்த மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் 10 ஆயிரம் வாக்குக்களுக்கு மேலாக பெற்றார். அதில் எங்கள் பங்கு என்ன என்பது அனைவர்க்கும் தெரியும்.
கொங்கு பகுதியில் மற்ற பிற கட்சிகள் வெற்றி பெற்றதற்கு எனது பிரச்சாரமும் ஓர் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சில சமயம் சூழ்நிலை காரணமாக கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அப்படிதான் கடைசியாக கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய கூட்டணி கூட சூழ்நிலை காரணமாக வைத்தோம்.
எங்கள் நிர்வாகிகளிடையே தடுமாற்றம் இருப்பதால் சில சமயம் முடிவுகள் தவறாக போய்விடுகிறது. தனியாக நிற்க வேண்டும் என்றால் நின்றுவிட வேண்டும். அதில் 2 ஆயிரம் , 4 ஆயிரம் 10 ஆயிரம் வாக்குகள் வந்தால் பரவாயில்லை என நிற்க வேண்டும். இப்போது கூட ஈரோடு நிர்வாகிகள் நிற்பதாக இருந்தால் நான் அவர்களுக்காக பிரச்சாரம் செய்கிறேன். என அவர் பேசினார். மேலும், இன்று மாலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து கூறுகிறேன் என சமக தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.