பெங்களூர் மார்க்கெட்டில் பண மழை..! வைரலாகும் பரபரப்பான வீடியோ..!

Default Image

பெங்களூரில் உள்ள கே.ஆர் மார்க்கெட்டில் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ இணையில் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கேஆர் மார்க்கெட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணத்தை வீசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், கருப்பு நிற உடை அணிந்த நபர் அவரது கழுத்தில் கடிகாரம் ஒன்றை தொங்க விட்டபடி அவர் வைத்திருந்த பையில் இருந்து 10 ரூபாய் தாள்களை மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வீசுகிறார்.

அவர் வீசிய பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பணத்தை வீசிய நபர் மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் எனவும் ஏன் அவ்வாறு செய்தார் என்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்