திருடனைக் காட்டிக்கொடுத்த செல்ஃபி..!
செல்ஃபி மோகம் சமீபகாலங்களில் மரணம் உள்ளிட்ட மிகப்பெரிய இழப்புகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்திவருகின்றன. ஆனால் நேற்று மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி மாவட்டத்தில் செல்போன் திருட்டை கண்டுபிடிக்க செல்ஃபி உதவியுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று தீபக் ராய் என்பவர் ஜல்பாய்குரி ஜனசந்தடி உள்ள நகரில் சாலையில் குறுக்கும்நெடுக்குமாக நகர்ந்த கூட்டத்திலிருந்து ஒரு செல்போனை திருடியுள்ளார். அவர் அதோடு நிற்காமல் ஒரு செல்ஃபியையும் எடுத்து திருடப்பட்ட செல்போனிலேயே அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார்.
திருடியவரின் செல்பி மோகம் அந்த குறிப்பிட்ட செல்போன் அதன் உரிமையாளருக்கே நன்மை செய்துள்ளதோடு திருடனையும் காட்டிக்கொடுத்துவிட்டது.
எப்படியெனில், சமூக வலைதளத்தில் வெளியான அந்தப் படத்தை பார்த்தும் அவர் இருக்கும் பகுதியை எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. நேரில் சென்று போலீஸார் அவரை விசாரித்தனர். குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். செல்போன் மீட்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸார்.