முன்பதிவில் மாஸ் காட்டிய ‘பதான்’.! வெளியாவதற்கு முன்பே இத்தனை கோடி வசூலா..?
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன்-த்ரில்லர் படமான “பதான்” நாளை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் வெளியாவதால், படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ஹிந்தி ரசிகர்களை போல தமிழ் ரசிகர்களும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். ஆம், தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய கட்- அவுட் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
TOP 5
Ticket Sales Of *Day 1*… #Hindi and #Hindi dubbed films…
NOTE: National chains only.1. #Baahubali2 #Hindi 6.50 lacs
2. #KGF2 #Hindi 5.15 lacs
3. #Pathaan 4.19 lacs* [1 day pending]
4. #War 4.10 lacs
5. #TOH 3.46 lacs pic.twitter.com/JzUmqbVRPK— taran adarsh (@taran_adarsh) January 23, 2023
இந்த நிலையில், பதான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட்கான முன்பதிவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, படம் முதல் நாளில் ரூ. 23 கோடிக்கும், இரண்டாவது நாளில் ரூ.13.3 கோடிக்கும் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது.
It’s 50 For #PathaanAdvanceBookings????#Pathaan Advance Booking Gross✅????
1st Day: 23.16 Cr [765271 tickets sold]
2nd Day: 13.38 Cr Cr [455622 tickets sold]
Other Days: 13.92 Cr [582987 tickets sold]Total: 50.46 Cr Gross [1803880 tickets sold]
Note: All India, All Shows!!????????
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) January 23, 2023
இதைப்போல மற்ற நாட்களில் ரூ.13.9 கோடி, என மொத்தமாக ரூ.50 கோடிக்கு மேல் டிக்கெட்கான முன்பதிவில் விற்கப்பட்டுள்ளதாம். மேலும், இந்த திரைப்படம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது. பதான் படத்தின் முன்பதிவு ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.