திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வங்கி கொள்ளை முயற்சி.! ஒருவர் அதிரடி கைது.!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வங்கியில் இன்று பட்டப்பகலில் ஒரு இளைஞர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலையில் ஓர் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. அதே மாவட்டம், பூச்சிநாயக்கன் பட்டியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இன்று காலை மிளகாய் ஸ்ப்ரே உட்பட சில ஆயுதங்களோடு வந்துள்ளார்.
வந்து 3 ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது வங்கியில் இருந்த மற்ற ஒரு ஊழியர் வெளியில் வந்து சத்தம் போட்டு, பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் உள்ளே புகுந்தனர்.
அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட இளைஞரை திண்டுக்கல் மேற்கை காவல் நிலைய காவல்துறையினர் லாவகமாக பிடித்து கைது செய்தனர்.