ஹைதராபாத் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்த நபர் கைது..!
ஹைதராபாத் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட நபரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் அப்சர் ஆலம் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்சர் ஆலம் மற்றும் அவரோடு மற்றொருவரும் ஒன்றாக பயணம் செய்துள்ளனர்.
இதில் அப்சர் விமான பணிப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்சர் மற்றும் அவரோடு பயணம் செய்த சக பயணியும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விமான பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
#WATCH | “Unruly & inappropriate” behaviour by a passenger on the Delhi-Hyderabad SpiceJet flight at Delhi airport today
The passenger and & a co-passenger were deboarded and handed over to the security team at the airport pic.twitter.com/H090cPKjWV
— ANI (@ANI) January 23, 2023