உயிரிழந்ததாக பரவிய வதந்தி…தனது ஸ்டைலில் பதில் கொடுத்த பார்த்திபன்.!
சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றி அடிக்கடி வதந்தி தகவல் பரவுவது வழக்கமான ஓன்று தான். அந்த வகையில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் உயிரிழந்ததாக யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் பார்த்திபனை டேக் செய்து ” என்ன அண்ணே இதல்லாம்” என்று கேட்டுள்ளார்.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்” என விளக்கம் கொடுத்துள்ளார்.
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! https://t.co/JmQqrxFL9K
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 23, 2023
இதன் மூலம் இது வெறும் வதந்தி தகவல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இயக்குனர் பார்த்திபன் தற்போது இரவின் நிழல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “52-ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.