ஏதாவது கருத்துக்களை அள்ளி வீசுவது தான் அண்ணாமலையின் வழக்கம் -அமைச்சர் சேகர் பாபு
வித்தியாசமான கருத்துக்களை அள்ளிவீசுவது தான் அண்ணாமலையின் வழக்கம் என அமைச்சர் சேகர் பாபு பேட்டி.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது, அறநிலையத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். மேலும், அறநிலையத்துறையை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் கருத்து குறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வித்தியாசமான கருத்துக்களை அள்ளிவீசுவது தான் அண்ணாமலையின் வழக்கம்.
ஊடகங்களின் முன் தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக இதுபோன்ற விஷயங்களை முன்னெடுக்கிறார். அவர் ஐபிஎஸ் பணியில் செயலாற்றியவர் போல் அவரது வார்த்தைகளும், சொல்லும் செயலும் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய அறிவுறுத்தல் என தெரிவித்துளளார்.