ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனையடுத்து காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுக, அமமுக போன்ற கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு 500 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில் 5% இயந்திரங்கள் மாதிரி வாக்கு பதிவு பயன்படுத்தப்படுகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இந்த வாக்கு பதிவு நடைபெறுகிறது.