இங்கிலாந்தில் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கெத்துக்காட்டிய இந்திய மாணவர்..!

Default Image

இங்கிலாந்தில் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் போது இந்திய மாணவர் கர்நாடகா கொடியை தூக்கி காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பேய்ஸ் பிசினஸ் யுனிவர்சிட்டியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவின் போது ஆதிஷ் ஆர் வாலி என்ற இந்திய மாணவர் ஒருவர் பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கச் சென்றபோது அவரது மாநிலமான கர்நாடகாவின் கொடியை தனது சட்டைப் பையில் இருந்து எடுத்து உயர்த்தி காட்டினார் .

ஆதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வை பதிவிட்டுள்ளார். அதில் அவர் லண்டன் நகரின் பேய்ஸ் பிசினஸ் (Bayes Business School) யுனிவெர்சிட்டியில் எம்எஸ் (MS) பட்டம் பெற்றுள்ளதாகவும், விழாவில் தனது மாநிலக் கொடியை உயர்த்தி காட்டியது பெருமைக்குரிய தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆதிஷ் தனது சொந்த மாநிலத்தின் மீது கொண்ட அன்பை பலரும் பாராட்டி பட்டம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்