ஆளுநர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்த பகத்சிங் கோஷியாரி.!
மஹாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மஹாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருக்கும் பகத்சிங் கோஷியாரி தனது ஆளுநர் பதவியில் இருந்து தன்னை விடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளாராம். இவர் தான் சத்ரபதி சிவாஜி பற்றி ஒரு கூட்டத்தில் பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது தான்னை ஆளுநர் பதவியில் இருந்து விடுக்க கோரியும். தான் அரசியலில் இருந்து ஒதுங்கி, புத்தகம் படிபப்து , யோகா பயிற்சி செய்வது என ஓய்வு எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டதாக மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.