பெண் பயணியிடம் வாக்குவாதம்- அரசு பஸ் நடத்துனர் சஸ்பெண்ட்
சென்னை சென்ட்ரலில் பெண் பயணிக்கு இலவச டிக்கெட் கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பஸ் நடத்துனர் சஸ்பெண்ட்
சென்னை சென்ட்ரலில் பெண் பயணிக்கு இலவச டிக்கெட் கொடுக்காமல் அரசு பஸ் நடத்துனர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளார்.
இந்த நிலையில், ஒழுங்கீனமாக நடந்த சிவசுதனை மாநகர போக்குவரத்து கழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. பொது மக்களிடம் மரியாதை, கண்ணியம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் அறிவுறுத்தியுள்ளார். பயணிகளிடம் கவனக்குறைவாக நடக்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.