ஓமன் செல்லும் ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தரையிறக்கம்.!
கேரளாவிலிருந்து ஓமன் செல்லும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுறத்திலிருந்து ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகருக்கு 105 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதன் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.
விமானம் கேரளாவிலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது அதன் தொழில்நுட்பக்கோளாறு விமானிகளால் கண்டறியப்பட்டு மீண்டும் கேரளாவிற்கே விமானம் திரும்பியது. விமானத்திலிருந்த 105 பயணிகளும் மற்றும் கேபின் பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர் என்று விமான நிறுவனம் தெரிவித்தது. மேலும் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல் வெளியானது.