க்ளீன் சேவ்.. ஸ்டைல் லுக்..வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
நடிகர் அஜித் குமார் அவ்வப்போது எங்கேயும் சென்றால் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாவது வழக்கமான ஒன்று. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அஜித் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து, தற்போது அஜித் சிக்கிமிக்கு சென்று அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் இருந்த ரசிகர்களுடன் எடுத்துகொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அஜித் க்ளீன் சேவ் செய்துகொண்டு மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்.
எனவே இது அவருடைய அடுத்த படத்திற்கான கெட்டப் ஆகா இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் லுக்கை பார்த்த பலரும் மாஸ்…வெறித்தனம் என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#AjithKumar Latest Pic#ThunivuPongalWinner | #THUNIVU | #AK | #AK62 pic.twitter.com/PZxrEkm8oi
— CineBloopers (@CineBloopers) January 23, 2023