பாலியல் சர்ச்சை குறித்து மேற்பார்வை செய்ய 5 பேர் குழு அமைப்பு.!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவருக்கு எதிரான பாலியல் சர்ச்சை குறித்து மேற்பார்வை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைப்பு.
இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக, எழுந்த பாலியல் சர்ச்சை குறித்த விசாரணையை மேற்பார்வை செய்வதற்கு 5 பேர் கொண்ட குழு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.
குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தலைமையில், மத்திய அரசு அமைத்துள்ள இந்த குழுவில் மல்யுத்தவீரர் யோகேஸ்வர் தத் போன்ற முக்கிய நபர்கள் அடங்கிய 5 பேர் இடம்பெற்றிருக்கின்றனர். இந்திய ஒலிம்பிக் கமிட்டி ஏற்கனவே இதனை விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புகார் அளித்தவர்கள் யார், யார் மீதெல்லாம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது, இது குறித்து நடைபெறும் விசாரணையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, மற்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் குறித்தும் முழு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்க இந்த குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.