என் புருஷன் கூட சேந்துட்டேன்…ரகசிய திருமணம் செய்த ‘பிரேம் ஜி’? பாடகி போட்ட பதிவால் பரபரப்பு.!
நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம் ஜி பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வினைட்டா தனது இன்ஸ்டாகிராமின் ஸ்டாடரியில் பகிர்ந்துள்ளார்.
பிரேம் ஜி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு என் புருஷன் கூட சேந்துட்டேன் என பாடகி வினைட்டா பதிவிட்டுள்ளார். #PremgiAmaren #Premgi #Vinitha pic.twitter.com/uWFZbmmQYI
— CineBloopers (@CineBloopers) January 23, 2023
புகைப்படத்தில் பிரேம் ஜியை பாடகி வினைட்டா இறுக்கமாக கட்டிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, அதில் “என் புருஷனுடன் சேர்ந்துவிட்டேன் ” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இவர்களுடைய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ” என்னது பிரேம் ஜிக்கு திருமணம் முடிந்துவிட்டதா..? எனவும், படகியுடன் பிரேம் ஜி ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார் எனவும் கூறி வருகிறார்கள்.
ஆனால், இது வதந்தி தகவலா அல்லது உண்மையில் இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா என்பதை பிரேம் ஜியே விரைவில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.