நடு ரோட்டில் ‘ரீல்ஸ்’ செய்த பெண்..! அபராதம் விதித்த காவல்துறை..!
உத்தர பிரதேசத்தில் நடு ரோட்டில் ரீல்ஸ் செய்த பெண்ணிற்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் வசித்து வருகிறார் வைஷாலி சௌத்ரி என்ற பெண். இவர் இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்துள்ளார். தற்பொழுது வைஷாலி காஜியாபாத் நெடுஞ்சாலையில் நடு வழியில் தனது காரை நிறுத்தி ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளிட்ட ரீல் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலையில் ரீல்ஸ் செய்ததற்காக அவருக்கு போக்குவரத்து காவலர்கள் ரூ.17,000 அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாஹிபாபாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
View this post on Instagram