எதிர்க்கட்சி யார் என முடிவு செய்வதற்குள் தேர்தல் முடிந்துவிடும்.! தி.க தலைவர் கீ.வீரமணி விமர்சனம்.!

Default Image

எதிர்க்கட்சி யார் என அவர்களுக்குள்ளே முடிவாகவில்லை. அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். – திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். திராவிட மாடல் ஆட்சி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை அனைவர்க்கும் எடுத்துக்காட்டும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைய உள்ளது.

மறைந்த திருமகன் ஈவெரா மக்களுக்கு செய்த பணி மிக ஆழமான பணி.  அந்த பணி தொடரவும், மதசார்பற்ற அணி வெற்றிபெறவும் வேண்டும். திமுக முக்கிய அமைச்சர்கள் வேட்பாளர் யார் என அறிவிக்கும்  முன்னரே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். என கூறினார் .

மேலும் , யார் உண்மையாக மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும்.
எதிர்க்கட்சிகள் யார் என்று அவர்களுக்கே தெரியாத சூழலில், மக்கள் அதனை எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குள்ளே முடிவாகவில்லை. அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். எனவும் தனது விமர்சனத்தை கீ.வீரமணி முன்வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்