காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வைகோ ஆதரவு..!
இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என வைகோ பேட்டி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மநீம கட்சியின் தலைவர் கமலஹாசன், கூட்டணி கட்சியினரான கம்யூனிஸ்ட் கட்சி, வைகோ, திருமாவளவன் , முஸ்லீம் லீக் கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோவை சந்தித்து இளங்கோவன் ஆதரவு கோரினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ அவர்கள், இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.